'வன்முறை வழி ஆகக் கூடாது..'- ரஜினி, 'உங்க கருத்த சொல்லுங்க மொதல்ல' - சீமான், 'வன்முறைக்கு அஞ்சும் வயசான பெரியவங்கள' - உதயநிதி! அனல் பறக்கும் ட்வீட்ஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், பேரணிகளும், வன்முறைகளும் நாடு முழுவதும் நிகழ்ந்தபடி இருக்கின்றன.

இந்நிலையில் இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டரில், ‘எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் ட்வீட்டை அடுத்து, நாம் தமிழர் கட்சி சீமான்  ‘பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம் தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்’ என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். 

எனினும் ரஜினியின் ட்வீட்டுக்கு பின்னர், ரஜினிக்கு ஆதரவான பலரும் #IStandWithRajinikanth என்கிற ஹேஷ்டேகினை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

MKSTALIN, CABBILL2019

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்