Rajinikanth: TN ஆளுநர்‌ RN ரவி-யுடனான சந்திப்பின் பின்னணி என்ன? ரஜினிகாந்த் சொன்ன விஷயம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு ஆளுநர் RN ரவி அவர்களை சந்தித்தது குறித்த பின்னணி தகவல்களை தற்போது செய்தியாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | யூடியூப் Scroll பண்றப்போ.. எதேச்சையா கூலி தொழிலாளி பாத்த வீடியோ.. "அடுத்த ஒரு வருஷத்துல அவரு பணக்காரானாவே மாறிட்டாரு.."

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் "அண்ணாத்த" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் "ஜெயிலர்" திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.‌ சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் RN ரவி அவர்களை சந்தித்தது குறித்த பின்னணியை தற்போது, நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், "தமிழக ஆளுநர் திரு.RN ரவி அவர்களுடனான இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.. சுமார் 20-30 நிமிடங்கள் உரையாடினோம்.

அவர் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து இருக்கிறார். எனினும் தமிழையும் தமிழக மக்களையும் நேசித்திருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு அவருக்கு பிடித்திருக்கிறது.‌

இந்த மக்களுக்காக எந்த நலத்திட்டங்களையும் செய்வதற்கு, தான் எந்நேரமும் தயார் என்று குறிப்பிட்டார்", என்று நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் RN ரவி குறித்தும் அவருடனான சந்திப்பு குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

1971 IPS Batch-ஆன ஆளுநர் RN ரவி முன்னதாக நாகலாந்து, மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநராகப் பொறுப்பு வகித்திருக்கிறார் என்பதும், தமிழ்நாட்டின் 15வது ஆளுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.‌

Also Read | இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.. விமான போக்குவரத்து அமைச்சர் உருக்கம்.. ஆஹா இப்படி ஒரு பிளான் இருக்கா..?

RAJINIKANTH, RN RAVI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்