“இந்திய திரையுலக பாடகர்களுக்கு இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு - அது இதுதான்!” - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிய மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றில் பேசி பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்று மிகவும் சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடிய மதிப்புக்குரிய எஸ்பிபி அவர்கள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. எஸ்பிபி அவர்களுடைய பாடலுக்கும் அவருடைய குரலுக்கும் இல்லாத ரசிகர்களே இந்தியாவில் இல்லை. எஸ்பிபியை அறிந்தவர்கள் அவருடைய பாடலை விடவும் குரலை விடவும் அவரையே அதிகம் நேசித்தனர். அதற்கு காரணம் அவருடைய மனிதநேயம்.  சிறியோர் பெரியோர் பேதம் பார்க்காமல் எல்லோரையும் மதித்தார். அவ்வளவு பெரிய அருமையான அன்பான மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடகர்களை உருவாக்கி இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இல்லாத சிறப்பு எஸ்பிபி அவர்களுக்கு இருக்கிறது. காரணம் அவர்கள் எல்லாம் குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே பாடினார்கள். அதனால் அவர்களை அந்த மொழிக்காரர்களுக்கு மட்டுமே தெரியும். எஸ்பிபி பல மொழிகளில் பாடினார். அதனால் அவரை இந்தியாவில் உள்ள அனைவருக்குமே தெரியும். குறிப்பாக அவருடைய ரசிகர்கள் இல்லாத இடமே இல்லை. அவருடைய இனிமையான கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் கூட நம்முடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்த குரலுக்கு உரிமையாளர் நம்முடன் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. அவர் மிகப்பெரிய பாடகர். மிகப்பெரிய ஆத்மா.

அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!”, இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

ரஜினி படங்களின் ஓபனிங் பாடல்களை பெரும்பாலும் எஸ்.பி.பி பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்