'ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினார்'... 'இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்'... மாநகராட்சி விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா இல்லையா, என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், தற்போது மாநகராட்சி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்திற்குச் செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். இதனை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அண்மையில் சென்னையிலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். ரஜினி காரை ஓட்டி செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

இதுதொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இந்த சம்பவம் குறித்து விசாரித்து பதில் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி இந்த விவகாரத்தில் மாநகராட்சி தற்போது விளக்கமளித்துள்ளது. அதில் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுத்தான் கேளம்பாக்கம் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர் இறப்பு, திருமணம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் நிலையில், ரஜினிக்கு எதன் அடிப்படையில் இ-பாஸ் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மருத்துவ அவசரத்திற்காக என இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்