'வெளியானது ரஜினியின் அடுத்த அறிக்கை!'... ‘அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து’.. ரஜினியின் ‘பரபரப்பு’ ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ரஜினிகாந்த் தன்னால் அரசியலுக்கு வரமுடியவில்லை என்றும், ரசிகர்களுக்கு தன் முடிவு ஏமாற்றமளித்தாலும், தன்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று உறுதியாக தன் முடிவை அறிவிப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரை மீண்டும் அரசியல் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி வலியுறுத்தி அவருடைய ரசிகர்கள் பலர் சென்னையில்  ‘வா தலைவா வா’ என கோஷமிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது இன்னொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நான் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.

தயவுகூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் ரஜினிகாந்த்” என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்