ரஜினியின் உடல்நிலை குறித்து... இணையத்தில் அதிகமாக பகிரப்படும்... அப்பலோ மருத்துவமனையின் முக்கிய அறிக்கை!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் டிச. 25ம் தேதி ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவித்திருந்தது.

அதற்கு பின்பு எடுத்த பரிசோதனைகளில் அவருக்கு கவலைப்படும்படியான பிரச்னைகள் எதுவும் இல்லயென்று மருத்துவமனை கூறியிருந்தது.

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் என்பது குறித்து நாளை முடிவு - அப்பல்லோ மருத்துவனை

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று  அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீராகியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

மேலும், ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மன அழுத்தத்தை தடுக்கும் வகையில் ஓய்வுஎடுக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்