Baba: “பாபா ரஜினி சார் தயாரிப்பு.. ஓடிடில இல்ல.. ரீ ரிலீஸ் ஆனா அண்ணாமலை, பாஷா மாதிரி ஹிட் ஆகும்.” - சுரேஷ் கிருஷ்ணா..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பாபா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “பாபா பட சமயத்தில் நாம் பண்ணிய மெனக்கெடலுக்கு அப்போதைய ரெஸ்பான்ஸ் அந்த படத்தில் இருந்த விஷயங்களுக்கு குறைவுதான். இப்போதும் சிறியோர் முதல் பெரியோர் வரை, இன்றைய 2 கே கிட்ஸ் வரை ரஜினி சாரை லவ் பண்ணுகிறார்கள். ரஜினி சாரின் ஸ்டைல் அனைத்தையும் சின்ன மொபைலில் கணினியில் காண்பதை விட, தியேட்டரில் பார்ப்பதே குதூகலம். எனவே படம் மீண்டும் தியேட்டரில் வெளியானால் இன்னும் ரெஸ்பான்ஸ் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து, இன்றைய சூழலில் மீண்டும் பாபா திரைப்படம் வெளியிடுவதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “நான் முன்பே சொன்னது போல பாபா ஒரு பேன்டசி திரைப்படம். ரஜினி சாரின் இந்த ஸ்டைலில், இந்த மாதிரி ஒரு கலரில் இருக்கும் திரைப்படத்தை அப்போதே மக்கள் பார்த்ததில்லை. ரஜினி சாரின் கரியிருக்கே அந்த படம் புதிதாக இருந்தது.
இப்போது இருக்கும் ஆடியன்ஸுக்கு இந்த படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இந்த படம் எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூபிலும் இல்லை. அதிர்ஷ்டவசமாக டிவியில் ஒரே ஒருமுறைதான் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த படம் ரஜினி சாரின் ப்ரொடக்ஷனில் உருவான திரைப்படம். அவர் எங்கேயும் கொடுக்கவில்லை. அந்த திரைப்படத்தை அவரே வைத்துக் கொண்டிருந்தார். எனவேதான் ரஜினி சார் இந்த திரைப்படத்தை இப்போது ரிலீஸ் பண்ணலாம் என்று சொன்னபோது நிச்சயமாக பண்ணி விடலாம் என்று கூறினேன்.
அங்கங்கே இருக்கும் சில காட்சிகளையும், பாடல்களையும் மட்டுமே இந்த தலைமுறையினர் பார்த்திருப்பார்கள். இந்த திரைப்படத்தை ஒரு தலைமுறை பார்க்காமல் இருந்திருக்கிறது எனும் பொழுது அவர்கள் இந்த திரைப்படத்தை பிரஷ்ஷாக பார்ப்பார்கள். அப்போதுதான் என்ன விதமான சர்ச்சைகளை குறிப்பிட்டு பாபா படம் அன்றைய தினத்தில் சில ரெஸ்பான்ஸை சம்பாதிக்காமல் விட்டதோ அவற்றையெல்லாம் இப்போது சம்பாதிக்கும். அபோதைய சர்ச்சை மற்றும் குழப்பங்கள் பலவற்றால் இந்த திரைப்படத்துக்கான உண்மையான மெரிட் அப்போது கிடைக்கப்பெறவில்லை. இப்போது இந்த படம் ரிலீசானால் நிச்சயமாக அண்ணாமலை, பாஷா போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வரிசையில் இந்த படம் சேரும்.” என தெரிவித்தார். மேலும் தற்போது ரிலீஸ் ஆகவுள்ள பாபா படத்தின் நீளம் 2:30 மணி நேரத்துக்குள் சுருக்கப்பட்டதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சூப்பர்ஸ்டார் குரலில் "சுவாமியே சரணம் ஐயப்பா".. சபரிமலையில் ரஜினிகாந்த்.. இணையத்தை கலக்கும் அரிய வீடியோ!! Throwback
- ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா.. ஸ்டைலாக வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!
- "தலைவரை எப்படியாவது பார்த்துடனும்".. பாகிஸ்தானை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்.. வைரல் Pics..!
- Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புனித் ராஜ்குமாருக்காக கர்நாடக அரசு விழாவில் .. வெளியான வைரல் புகைப்படங்கள்.. முழு தகவல்
- Rajinikanth: TN ஆளுநர் RN ரவி-யுடனான சந்திப்பின் பின்னணி என்ன? ரஜினிகாந்த் சொன்ன விஷயம்.!
- ரஜினியோட அறிக்கையை கவனிச்சீங்களா.. வெங்கடேஷ் ஐயர் செம்ம ஹேப்பி!
- நடுமைதானத்தில் ரஜினி ஸ்டைலில் கெத்தா… மாஸா… கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ் ஐயர்!
- பூங்கொத்தோடு ரஜினி வீட்டுக்குள் போன சசிகலா.. பூரிப்போடு வரவேற்ற குடும்பம்.. என்ன நடந்தது..?
- ரஜினிகாந்திற்கு 'என்ன' சிகிச்சை நடந்தது...? - 'உடல்நிலை' குறித்து 'காவேரி' மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை...!
- 'மருத்துவமனை' நிர்வாகத்திடம் கேட்டோம், அவங்க 'என்ன' சொன்னாங்கன்னா... - ரஜினிகாந்த் 'உடல்நிலை' குறித்து மருத்துவத்துறை அமைச்சர் தகவல்...!