'ரஜினிக்கு என்ன ஆச்சு?'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம்! ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த  ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்துவந்தது.

கடந்த 15-ம் தேதி முதல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்த நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்ததை அடுத்து, உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு குழுவில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ: 'மறைந்த மூத்த தமிழறிஞர் தொ.பரமசிவனுக்கு'.. 'எழுத்தாளர்கள், அரசியல், திரைப் பிரபலங்கள் அஞ்சலி'.. என்ன செய்திருக்கிறார் தொ.ப ?

இதனால் ரஜினி ரசிகர்கள் சற்று பதற்றம் அடைந்தனர். இதனை அடுத்து ரஜினிகாந்துக்கு 22-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததால் ரசிகர்கள் நிம்மதி ஆனார்கள். எனினும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி, மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க கோரியதுடன், இன்று சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் ரஜினிகாந்த் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுபற்றி வெளியாகியுள்ள அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதாகவும், ரஜினிகாந்த்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.  பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அதே சமயம் ரஜினி 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும், அவருக்கு யாரும் தொந்தரவு அளிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

ALSO READ: “கிருஸ்துமஸ், புத்தாண்டில் விதிகளை மீறினா எங்களுக்கு போன் பண்ணாதீங்க!” .. ஜெர்மனியில் போலீஸாரின் ‘வியக்க வைக்கும்’ வேண்டுகோள்!

ரஜினியின் அரசியல் கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு, வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்காக, ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகமே மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்