“ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாதான் இருக்கு!” - ரஜினி உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றிய முக்கிய தகவலை அப்போலோ மருத்துவமனை தற்போது மீண்டும் வெளியிட்டுள்ளது.

ALSO READ: 'ரஜினிக்கு என்ன ஆச்சு?'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம்! ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரை வைத்து ‘V’ எனும் ஆங்கில எழுத்தில் தொடங்கும் பல தலைப்புகளில் திரைப்படம் எடுத்து வந்த ‘சிறுத்தை’ பட இயக்குநர் சிவா ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் திரைப்பட படப்பிடிப்புக் குழுவினர் யாரோ 4 பேருக்கு கொரோனா வந்ததையடுத்து ரஜினிகாந்த்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்த அதன் பிறகே ரஜினிகாந்தின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.எனினும் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில நாட்கள் ஹைதராபாத்தில் ரஜினி தன்னை தனிமை படுத்திக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் நேற்று திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அம்மருத்துவமனை நேற்று வெளியிட்ட தகவலில் நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், அவருடைய ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தது. சில மணிநேரங்களிலேயே நேற்றைய தினம் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகி விட்டதாகவும், எனினும் ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது.

ALSO READ: "விஜய் ரசிகர்களுக்கு ஆதங்கம்... தம்பி விஜய் குறைந்த பட்சம் சூர்யா அளவுக்காச்சும்.." - மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!.. வீடியோ!

இந்த நிலையில் இன்றைய தினம் அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அடுத்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும், மருத்துவ பரிசோதனையில் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் இன்றும் அதிகமாகவே இருப்பதாகவும் ஆனால் நேற்று அனுமதிக்கப் பட்டபோது இருந்ததை விட அவருடைய உடல்நிலையில் இப்போது நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருடைய ரத்த அழுத்த மாறுபாட்டை மருத்துவர்கள் மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் எப்போது வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என்பது குறித்த தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியாகலாம் என்று தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்