‘அவசியம் வந்தால்’... ‘நாங்கள் இருவரும் இணைவோம்’... ‘ரஜினி, கமல் அதிரடி’... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தநிலையில், ரஜினியும் இதனை ஆமோதித்துள்ளார்.
![‘அவசியம் வந்தால்’... ‘நாங்கள் இருவரும் இணைவோம்’... ‘ரஜினி, கமல் அதிரடி’... விவரம் உள்ளே! ‘அவசியம் வந்தால்’... ‘நாங்கள் இருவரும் இணைவோம்’... ‘ரஜினி, கமல் அதிரடி’... விவரம் உள்ளே!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/rajini-and-kamal-says-we-will-work-together-for-tamil-nadu-thum.jpg)
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, ‘தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ரஜினியும், நானும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். ரஜினியுடன் இணைந்தால் அது அதிசயம் இல்லை. ரஜினியுடன் அரசியலில் இணைவதற்கான அவசியம் வந்தால் நிச்சயம் அதை தெரிவிப்போம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து, நடிகர் ரஜினிகாந்த் சொன்னது விமர்சனம் அல்ல நிதர்சனம்’ என்றார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘நானும், கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால், கட்டாயம் இணைவோம். எனது கருத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு கருத்து கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி. சென்னையில் விழா ஒன்று எடுக்கப்பட்டது. அந்த விழாவில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், கமலும்- ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'இவங்களோட கம்பேர் பண்ணிகிட்டா'.. 'அவருக்கு அவரே சூடு போட்டுக்கிறார்னு அர்த்தம்'.. கொங்கு ஈஸ்வரன் காட்டம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘அவர் சொல்றது உண்மைதான்’... ‘ரஜினி கருத்துக்கு’... 'ஆதரவு தெரிவித்த கமல்'!
- 'அந்த வெற்றிடத்தை'.. 'இந்த காற்று நிரப்பி பல நாளாச்சு!'.. ரஜினி பேச்சுக்கு துரைமுருகன் பதில்!
- 'திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா?'.. '2 பேருமே சிக்க மாட்டோம்!'.. ரஜினி சொன்ன பஞ்ச்.. வீடியோ!
- ‘நடிகர் விஜய்சேதுபதிக்கு’... ‘எதிரான வணிகர்கள் போராட்டம்’... ‘மண்டி ஆன்லைன் நிறுவனம் விளக்கம்’!
- '#கமல்60': திரையில் இருந்தே 'அரசியலும் சமூகமும் உலகநாயகனின் இரண்டு கண்கள்'.. 'ஹேப்பி பர்த்டே கமல்ஹாசன்'!
- ‘பிறவியிலே வாய் பேச, நடக்க முடியாத சிறுவன்’.. விஜய் பட ‘பஞ்ச் டயலாக்’ வைத்து சிகிச்சை..! கேரளாவில் நடந்த அதிசயம்..!
- Watch Video: நீயே 'வெட்கப்படல'.. சமுதாயத்தில் 'தாக்கத்தை' ஏற்படுத்திய பிகில்.. செம வைரல்!