‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’... ‘பஸ் ஸ்டாப்பில்’... ‘இளைஞர் செய்த காரியத்தால்’... 'அதிர்ந்துபோன பொதுமக்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் குமார் (25). பி.ஏ. பட்டதாரியான இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால், ஏற்கனவே விஷம் அருந்தி அருண் குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனாலும் அந்த மாணவி அருண் குமாரின் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் தினமும் அந்த மாணவி கல்லூரிக்கு செல்லும்போது அருண் குமார் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அந்த மாணவி கல்லூரி செல்வதற்காக சேத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு வந்த அருண் குமார், மாணவியிடம் தனது காதலை ஏற்குமாறும், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். ஆனால் மாணவி அவரை பொருட்படுத்தாமல் சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த அருண் குமார் தீடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்துக்கொண்டார். உடல் தீப்பற்றி எரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இருப்பினும் அருண் குமாரின் முதுகு, கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருண் குமாரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 60 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒருதலைக் காதலால் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கண்முன்னே’ பள்ளி ‘மாணவிக்கு’ நேர்ந்த பயங்கரம்... ‘புலம்பியபடியே’ இருந்த ‘உறவினர்’ எடுத்த ‘விபரீத’ முடிவு...
- 'தம்பி நீங்க வந்துருங்க ப்ளீஸ்'... 'பி.டெக்' மாணவனை துரத்திய வாய்ப்பு'... மாணவனின் அட்ரா சக்க பதில்!
- ‘பலமுறை’ சொல்லியும் கேட்காத பெற்றோர்... கோவையில் ‘7ஆம் வகுப்பு’ மாணவி செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- ‘வாயில் நுரை’.. ‘அருகில் கிடந்த விஷம்’.. காவிரி ஆற்றங்கரையில் கிடந்த கார் டிரைவர், கல்லூரி மாணவி சடலம்..!
- "சண்டை போட்ட பசங்க எல்லாம் இங்க வாங்க..." "1330 குறளையும் இப்ப அங்கிளுக்கு எழுதி காட்றிங்க..." போலீசாரின் 'நூதன' தண்டனை...
- ‘சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க’... ‘உதவிக்கரம் நீட்டப்படுமா?’... ‘இந்தியா கொடுத்த அதிரடி பதில்’!
- 'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்!
- 'கல்யாண வீட்டிற்கு போன பெற்றோர்'... 'திரும்பி வந்தபோது மகள் கிடந்த கோலம்'...அதிர்ச்சி சம்பவம்!
- கல்யாணத்துக்கு முன்தினம் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!
- 'மனைவியின் அவசர முடிவால்’... ‘கதறித் துடித்த கணவர்’... ‘2 பெண் குழந்தைகளுடன்’... 'ஒரே நாளில் நிலைகுலைந்துப் போன குடும்பம்'... 'திகைப் பூட்டிய சம்பவம்'!