'சரணடைந்த பிறகு'... மிகவும் கவலைக்கிடமான உடல்நிலையில் 'சரவணபவன்' உரிமையாளர் ராஜகோபால்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறை தண்டனைக்காக நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைசெய்யப்பட்ட வழக்கில் பிரபல உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு 2004 ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால் மீண்டும் ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முற்பட்டார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்த தண்டனை மீண்டும் அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த வழக்கில் நீடித்த இழுபறியைத் தாண்டி ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தான் சரணடைவதற்கான காலநீட்டிப்பு அவகாசத்தை தரவேண்டும் என்று தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜகோபால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமும் ராஜகோபாலுக்கு காலநீட்டிப்பு ஏதும் வழங்க முடியாது என்று சொல்லி உடனடியாக சரணடைய வேண்டும் என்று கட்டளையிட்டது.
அதன்படி கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே ராஜகோபால் சரணடைந்தார். இந்த சூழலில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய உறவினர்கள் அவரின் அருகிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரு மாசம் இத பண்ணனும்’.. தற்கொலை நாடகமாடிய பெண்.. நீதிபதி ‘விசித்திர தண்டனை’!
- 'கொலைக்குற்ற' வழக்கில்.. ஸ்ட்ரெச்சரில் வந்து 'சரணடைந்த'.. பிரபல உணவக உரிமையாளர்!
- ‘சொன்னா கேட்க மாட்டீங்களா?’... 'முல்லைப் பெரியாறு விவகாரம்’.. ‘உச்சநீதிமன்றம் அதிரடி'!
- 'முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி'.. சம்மந்தப்பட்ட '30 வருட வழக்கில்'.. பரபரப்பு தண்டனை!
- 'சென்னை உணவகங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல் இதுவா?'.. தொடங்கும் அவல நிலை!
- 'இனி இதுக்கெல்லாம் FIR தேவையில்ல.. தயவு தாட்சண்யமில்லாம அரஸ்ட் பண்ணுங்க'.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
- 'சிக்னல் காட்டுது.. ஆனா சிக்கல'.. தனிப்படை போலீசுக்கே டஃப் கொடுக்கும் இளம்பெண்!
- 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு'... 7 பேர் விடுதலையை எதிர்த்து மனு... 'உச்சநீதிமன்றம்' அதிரடி!
- “தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் அதிரடி தீர்ப்பு”!...முழு விவரம்!
- ‘தல’யவே ஏமாத்திட்டாய்ங்களா.. எடு ரூ.40 கோடிய.. தனியார் நிறுவனத்தை பதறவைக்கும் தோனியின் பிரில்லியண்ட் மூவ்!