‘நிவர் புயலால் வெளுக்கும் மழை’.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ‘கோபாலபுரம்’ இல்லத்தில் புகுந்த மழைநீர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடலில் உருவான நிவர் புயல் கடலூருக்கு தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் தற்போது 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை தீவிர புயலாகும் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில், ‘புயல் கரையை கடக்கும்போது நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாதுதுரை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் 110-120 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். அதே நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 80 - 90 கிலோமீட்டர் வேகம் முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று இருக்கும். இன்று நள்ளிரவு அல்லது நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நிவர் புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளது’ என கூறியுள்ளார்.

இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சூழலில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்