'இருக்கு.. அடுத்த 5 நாள்ல இருக்கு!'.. தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்! இன்று தமிழகத்தில் பரவலான மழை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏப்ரல், 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளதாகவும், இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள அவர், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையில் தென் தமிழகம் மற்றும் உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், முன்காலையில் நல்ல வெயிலும் இருக்கும் என்றும்
குறிப்பிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி, நெல்லை, வால்பாறை சரக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதாகவும், அடுத்த 5 நாட்களில் அதிகபட்சமாக 35 மிமீ வரை மழை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 6.30 மணியில் இருந்து ஒரு மணிநேரம் வரை மழை பெய்தது. தவிர, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்பாடா வெயில்ல இருந்து தப்பிச்சோம்'... 'திடீரென புரட்டி எடுத்த மழை'... உற்சாகத்தில் மக்கள்!
- ‘வெப்பச்சலனம்’ காரணமாக... ‘9 மாவட்டங்களில்’ மழைக்கு வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வுமையம் தகவல்...
- ‘இந்த 3 மாதங்களும்’... ‘பத்திரமா இருந்துக்கோங்க’... ‘எச்சரிக்கும் வானிலை மையம்’... தகவல்கள் உள்ளே!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- அடுத்த 24 மணிநேரத்தில்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- "மளமளவென புகுந்த நீர்"... "மிதக்கும் கார்கள்!"... "மகிழ்ச்சியில் அரசு"...
- தமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்?... சென்னை வானிலை மையம் தகவல்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- அடுத்த 24 மணிநேரத்தில்... விடைபெறும் வடகிழக்கு பருவமழை... பனிப்பொழிவு நிலவும்... வானிலை மையம் தகவல்!
- இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...