வெளுத்துவாங்கப்போகும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு இப்படித்தான்.. 18 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுமையம் கொடுத்த வார்னிங்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
Also Read | எலான் மஸ்க்கின் Tweet-ல் இருந்த வார்த்தை.. உலகமே அத பத்திதான் பேசிட்டு இருக்கு... குஷியில் நெட்டிசன்கள்..!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைபெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஒங்கோல் அருகே வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகன்று வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, இன்று அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
கனமழை
அதேபோல நாளை மற்றும் அதற்க்கு அடுத்தநாள் (7 மற்றும் 8 தேதிகள்) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்திருக்கிறது. மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்பு இருப்பதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் வழக்கத்திற்கு மாறாக வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 30 நாளுல 36 லட்சம்.. "கல்யாணம் பண்ண போறவரு தானேன்னு" நம்புன பெண்.. கதி கலங்க வெச்ச 'Voice' மெசேஜ்!!
- இனி சென்னை பீச் போறவங்களுக்கு இப்படி வசதி வரப்போகுதா..? - வெளியான தகவல்கள்.
- சென்னை விமான நிலையம் வந்த பயணி.. "15 வருசமா இவரை தேடிட்டு இருக்காங்களாம்".. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு!!
- முப்பெரும் விழாவாக சென்னையில் நடக்கும் திருநங்கைகளுக்கான ‘மிஸ் சென்னை 2022’ போட்டி.!
- மாடலிங் பெண்கள் தான் டார்கெட்டே.. இளைஞரின் தினுசான உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!
- இரவு 12 மணி.. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தோழிகள்.. படுவேகத்தில் வந்த கார்.. அடுத்தடுத்து நடந்த துயர சம்பவம்!!
- ‘கழுத்துல தாலி ஏறப்போகுது.. என்னை கூட்டிட்டு போ’ - காதலி தட்டிவிட்ட மெசேஜ்.. சினிமா பாணியில் காதலன் கொடுத்த எண்ட்ரி.!
- பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த வரலாறுகாணாத மழை.. வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்.. உறைந்துபோன உலக நாடுகள்..!
- வரலாறு காணாத பேய்மழை.. "3 ல ஒருபங்கு நிலம் தண்ணில இருக்கு".. பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ந்துபோன மக்கள்..!
- திருடிய கடையிலேயே பொருளை விற்ற பலே ஊழியர்.. எதார்த்தமா ரூமுக்குள்ள போனப்போ உரிமையாளருக்கு தெரியவந்த உண்மை..!