‘கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் குட்பை’... ‘இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’... ‘வானிலை மையம் தகவல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனாவுடன் வெயில் கொளுத்தி வரும் நிலையில், 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் அவ்வப்போது வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், உள் மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்