'அடுத்த 3 நாள்களுக்கு வாய்ப்பு இருக்கு'... 'வானிலை மையம் அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கடந்த திங்கள்கிழமை அன்று, பரவலாக மழை பெய்தது. சென்னையில் திங்கள் இரவு 8 மணிக்குத் தொடங்கிய மழையானது நள்ளிரவு வரை தொடர்ந்தது. அடையாறு, வேளச்சேரி, வடசென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

வெப்பச் சலனம் காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்ததாகவும், அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

RAIN, TAMILNADU, PUDUCHERRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்