என்னய்யா இது..! சென்னையை நனைத்த திடீர் மழை.. புத்தாண்டுக்கும் இதே நிலைமை தானா..? வானிலை மையம் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

என்னய்யா இது..! சென்னையை நனைத்த திடீர் மழை.. புத்தாண்டுக்கும் இதே நிலைமை தானா..? வானிலை மையம் முக்கிய தகவல்..!
Advertising
>
Advertising

சென்னையில் நேற்று முதல் திடீரென மழை பெய்து வருகிறது. அதில் ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.

Rain expected next two days, Meteorological Centre, Chennai

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (30.12.2021) கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

Rain expected next two days, Meteorological Centre, Chennai

நாளை (31.12.2021) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புத்தாண்டு (01.01.2022) அன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்