‘5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’... 'வானிலை மையம் தகவல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுத்த 2 நாட்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைப்பெய்து வரும்நிலையில், வருகிற 27-ந் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும், அடுத்தவார இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAIN, CHENNAI, IMD, TN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்