‘13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களிலும், புதுவையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

RAIN, ALERT, CHENNAI, IMD, DISTRICTS, LIST, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்