'உருவாகும் புயல் சின்னம்'... 'அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்க கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. இதனால் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்தப் புயல் வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிசாப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகை, கடலூர், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் புகை மூட்டமாக காணப்படுவது குறித்து பதிலளித்துள்ள சென்னை வானிலை மையம், பகல்நேர வெப்பநிலையிலும், இரவு நேர வெப்பநிலையிலும், வேறுபாடு இருப்பதாலும், காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பத்தாலும் பனிப்போன்று காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளது. வெப்பநிலை மாறும் போது இந்த நிலை மாறும் என கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மனைவிகிட்ட சொல்லிட்டுதான் போனார்!'.. சாதிமறுப்புத் திருமணம் செய்த 3 மாதத்தில்.. சென்னையில் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கி சூடு’!.. தப்பி ஓடிய நண்பர்கள்..! தாம்பரம் அருகே பரபரப்பு..!
- ‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..
- 'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்!
- 'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'! ... ‘சென்னையில் பரபரப்பு’!
- 'அடுத்த 2 நாட்கள்'... 'எங்கெல்லாம் மழை'... 'வானிலை மையம் தகவல்!
- 'கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்'... ‘அதுக்குள்ள நொடியில்’... ‘இளம்ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- ‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை..! பதற வைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘தமிழகத்தில் காற்று மாசு பாதிப்பு உண்டாகுமா?’... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
- ‘சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை பலியான சம்பவம்’! இரண்டு பேரை கைது செய்த போலீசார்..!