ஒரே நேரத்தில் 69 இடங்களில் திடீர் ரெய்டு..! முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் வழக்குப்பதிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் தங்கமணியின் வீடு உள்ளிட்ட அவர் சார்ந்த 69 இடங்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் அவர் சார்ந்துள்ள 69 இடங்களில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாறை அருகில் உள்ள ஆலம்பறை தங்கமணி வீட்டிலும் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல், ஈரோடு, வேலூர், சேலம், கரூர், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் சுமார் 14 இடங்களில் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோக, கர்நாடகாவில் 1 இடத்திலும் ஆந்திராவில் 2 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்கமணி வருமானத்துக்கு மீறி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாவும் க்ரிப்டோகரன்ஸி உள்ளிடவைகளில் பெரும் அளவு முதலீடு செய்து இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

AIADMK, EX MINISTER THANGAMANI, ADMK THANGAMANI, முன்னாள் அமைச்சர் தங்கமணி, தங்கமணி ரெய்டு, அதிமுக தங்கமணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்