"நான் ஏன் தமிழன்?"... முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியிட்டு விழாவில் ராகுல்காந்தி உணர்ச்சி பொங்க பேச்சு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்க்கை வரலாற்றை உங்களில் ஒருவன் என்னும் நூலாக எழுதியுள்ளார். பூம்புகார் பதிப்பகத்தின் மூலம் அச்சான இந்த நூலை இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள 'சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் ராகுல் காந்தி வெளியிட்டார்.

"நான் ஏன் தமிழன்?"... முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியிட்டு விழாவில் ராகுல்காந்தி உணர்ச்சி பொங்க பேச்சு..!
Advertising
>
Advertising

உங்களது ஒருவன் பாகம் 1-ல் முதல்வர் ஸ்டாலின் தனது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். புத்தகத்தை வெளியிட்ட ராகுல் காந்தி "நான் ஏன் தமிழன்?" என்று உணர்ச்சி போங்க பேசினார்.

Rahul Gandhi emotional speech about Tamil language in Chennai

நான் ஏன் தமிழன்?

முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி," பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது பத்திரிகையாளர் ஒருவர் என்னிடத்தில்,"நீங்கள் ஏன் தமிழகத்தை மேற்கோள் காட்டினீர்கள்?" என்றார். அப்போதுதான் நான் அவ்வாறு சொல்லி இருந்ததை உணர்ந்துகொண்டேன். என்னையும் அறியாமலேயே என் வாயில் இருந்து தமிழ் என்ற சொல் வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம் என பின்னர் யோசித்தேன். என்னுடைய ரத்தம் உங்களுடைய மண்ணுடன் கலந்திருக்கிறது. 3500 ஆண்டுகள் பழமையானது உங்களது கலாச்சாரம். அவை குறித்து நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் என்னையும் அறியாமல் அந்த வார்த்தையை கூறி இருக்கிறேன். தந்தையை இழப்பது மிகவும் வலியை தரக் கூடியது. அதனை அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டேன். தமிழனாக இருப்பதன் பொருள் என்ன?. நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மனிதநேயத்துடன் வந்தேன். உங்கள் மொழி, வரலாறு, பராம்பரியத்திற்கு தலைவணங்குபவனாக வந்தேன்" என்றார்.

குற்றச்சாட்டு

பிரதமர் மோடிக்கு தமிழகம் பற்றிய புரிதல் இல்லை எனவும் அதன் காரணமாகவே நீட், ஜிஎஸ்டி விவகாரங்களில் தமிழக மக்களுக்கு அவர் செவிசாய்க்கவில்லை எனவும் ராகுல் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்துப் பேசிய அவர்," தமிழ்நாடு 3500 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை கொண்டுள்ளது. யாராலும் தமிழகத்தின் மீது எதனையும் திணிக்க முடிந்ததில்லை. அன்பாக பேசினால் தமிழக மக்களிடம் இருந்து எதையும் பெற முடியும்" என்றார்.

உரிமை மீறல்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியபோது, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மாநில உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். ஜம்மு காஷ்மீரை அம்மக்கள் ஆழ முடியாமல் உள்ளனர் என்றும் குஜராத் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த சில அதிகாரிகள் அங்கே ஆட்சி செலுத்தி வருவதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார்.

MKSTALIN, MKSTALIN, RAHULGANDHI, CHENNAI, TAMIL, ஸ்டாலின், ராகுல்காந்தி, தமிழன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்