'ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் ‘ஃப்ரீ பால் டவர்’ எனும் விளையாட்டும் உண்டு. மிக உயரமான ராட்சத இரும்பு தூணின் இருபுறமும் இரும்பு தொட்டில்போல் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் பொதுமக்கள் அமர்ந்ததும், ஒன்றன்பின் ஒன்றாக மேலே செல்லும் இரும்பு தொட்டில்கள், அங்கிருந்து வேகமாக கீழே இறங்கும்.

தினந்தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று இங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் ஏறி உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்த ராட்டினத்தின் இரும்பு கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. 

கீழ் பகுதியில் இருந்தபோது, இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்ததால், லேசான காயங்களுடன், அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உபகரணங்களுக்கு தரச்சான்று பெறும் வரை இயக்கக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

QUEENSLAND, PARK, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்