இனி சென்னை விமான நிலையத்திலும்... சினிமா படங்கள் பார்க்கலாம்... பிரபல நிறுவனத்தின் 5 நவீன தியேட்டர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்பவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், பொழுதைப் போக்க 5 நவீன சினிமா தியேட்டர்கள் முதல் முறையாக கொண்டு வரப்படுகின்றன.

சினிமா தியேட்டர் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் பி.வி.ஆர். சினிமாஸ். இந்த நிறுவனம் 50 நகரங்களில் 584 திரைகளை வைத்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைத்து விடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை விமான நிலையத்தில், தற்போது கட்டப்பட்டு வரும் பல அடுக்கு கார் பார்க்கிங் கட்டடத்தில் பி.வி.ஆர். நிறுவனம், 5 திரைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்களை சர்வதேச தரத்தில் அமைக்க உள்ளது.

சுமார் ரூ.250 கோடி செலவில் ஒலிம்பியா குழுமம், சென்னை விமானநிலையத்தில், கார் பார்க்கிங், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் குளிர்பானக் கடைகளும் தற்போது அமைத்து வருகிறது. இந்த ஒலிம்பியா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள பி.வி.ஆர். நிறுவனம், சுமார் 15 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதுகுறித்து பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி பிரமோத் அரோரா கூறுகையில், ‘1,000 இருக்கைகள் கொண்ட 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு மத்தியில் இது செயல்பாட்டுக்கு வரும்.

ஏர்போர்ட்டுக்கு வரும் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கும் வகையில் இது அமைய உள்ளது. ஆனால் தியேட்டருக்கு 20 சதவீதம் விமானப் பயணிகளும், 80 சதவீதம் வெளியில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

CHENNAIAIRPORT, PVR, CINEMAS, PASSENGERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்