'மெஷின் ஆச்சேன்னு பாக்குறேன்...' 'ஒழுங்கு மரியாதையா பணத்தை வெளிய தள்ளு...' - கடுப்பானவர் ஏடிஎம்-ஐ செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் ஏ.டி.எம் எந்திரத்தை அரிவாளால் வெட்டி பணம் எடுக்க முயற்சித்துள்ளார் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
கரூர் மாவட்டத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான ஜவஹர் பஜாரில் இருக்கும் கரூர் வைஸ்யா வங்கியின் ஏ.டி.எம் மையத்தை உடைத்து பணம் திருட முயற்சித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏ.டி.எம் மையத்தின் சிசிடிவி வீடியோவை கைப்பற்றியுள்ளனர்.
அந்த வீடியோவில் நேற்று (07.11.2020) சுமார் 3மணியளவில் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்த 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் சுற்றும் முற்றும் பார்த்து, தனது பையில் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாள் கத்தியை எடுத்துப் பணம் எடுக்கும் எந்திரத்தை வெட்டி, 'பணத்தைக் கொடு... பணத்தை கொடு' எனக் கத்தியவாறே வெட்டு வெட்டு என வெட்டியுள்ளார்.
மேலும் பலமுறை முயற்சித்தும் ஏ.டி.எம்மிலிருந்து பணம் வராததால் ஏமாற்றம் அடைந்து, ஏ.டி.எம் இயந்திரத்தைக் கடைசியாக ஒரு முறை வெட்டிவிட்டு அந்த மையத்தை விட்டு ஓடியுள்ளார்.
இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் ஏ.டி.எம் இயந்திரத்தை வெட்டிய மர்ம நபர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த மொய்சன்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் திருச்சியில் இருந்து கரூர் வந்த மொய்சன்குமாரிடம் பணம் இல்லாததால் குடிபோதையில் அப்பகுதியில் இருந்த பழக்கடையில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு ஏ.டி.எம்-ஐ உடைக்க முயற்சி செய்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஏடிஎம்-ல பணம் டெபாசிட் செய்தால் தனி கட்டணம்...' ஆனால் 'அந்த நேரத்துல' மட்டும் இலவசம்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல தனியார் வங்கி...!
- 'மிட்நைட்ல வந்த அபாய ஒலி...' 'இத கொஞ்சம்கூட எதிர்பார்க்காமா சிசிடிவிக்கு துணி கட்டி மறைச்சுக்கிட்டு இருந்தப்போ தான்...' - அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
- 'ஏடிஎம் கீபேட் வொர்க் ஆகல...' 'டெபாசிட் பண்ணிட்டேன், கொஞ்ச நேரத்துல மெசேஜ் வரும்...' - மெசேஜ்க்காக காத்திருப்பு...' ஆனால் நடந்தது என்ன...? - அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்...!
- அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!.. 'இனி என்ன... பண்டிகைய கொண்டாட வேண்டியது தானே!'.. முழு விவரம் உள்ளே
- '4 கிலோ தங்கம்... பத்தரை கிலோ வெள்ளி... இன்னும் பல'... லஞ்சம் வாங்கியே ரூ.100 கோடிக்கு சொத்து!.. அரசு அதிகாரி சிக்கியது எப்படி?
- ''இது'க்கு ஏன் டைம் கொடுக்கணும்'!?.. 'வட்டிக்கு வட்டி வசூலா'?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. கடன் செலுத்துவதற்கான சலுகை நீட்டிக்கப்படுமா?
- 'யப்பா...! இந்த ஏடிஎம் கார்டு வச்சு பணம் எடுத்து கொடுப்பா...' 'கார்டு கொடுத்த சில நொடிகளில் இளைஞர் போட்ட பிளான்...' 'வெளிநாட்டுல கஷ்டப்பட்டு உழைச்ச காசு...' - நூதன மோசடி.
- 'பேங்க்ல இருந்து பேசுறேன் சார்...' 'OTP நம்பர் கொஞ்சம் சொல்றீங்களா...' - நம்பிகையோட சொன்னவருக்கு நடந்த கொடுமை...!
- 'IT இளைஞர்கள் தான் டார்கெட்டே'... 'அப்பாடா, வாழ்க்கை செட்டாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டா'... 'அடுத்ததாக காத்திருந்த பேரதிர்ச்சி!'... வெளியான 'பகீர்' பின்னணி!!!...
- பேக் சைடு கதவ ஒடச்சுருக்காங்க...! 'அப்பாவுக்கு இறுதிச்சடங்கு முடிச்சுட்டு வரதுக்குள்ள...' - வீட்ல காத்திருந்த அதிர்ச்சி...!