'ஊரடங்கு உத்தரவுனால... சாப்பாடு இல்லாம யாரும் கஷ்டபடக்கூடாது!'... புதுக்கோட்டை விவசாயி செய்த பிரம்மிக்கவைக்கும் செயல்!... வீடு வீடாக நடத்திய அற்புதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதுக்கோட்டையில் மூர்த்தி என்ற விவசாயி, வீடு வீடாக சென்று 1 டன் அளவிலான காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துவிட்டது. இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அத்திவாசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இயற்கை விவசாயியான மூர்த்தி என்பவர் தனது வயலில் விளைந்த மற்றும் கடைகளில் வாங்கிய புடலங்காய், பீக்கங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 1000 கிலோ எடையுள்ள காய்கறிகளை புதுக்கோட்டை காந்திநகர் பகுதிக்கு சென்று வீடு, வீடாக இலவசமாக வழங்கினார்.
இதுகுறித்து மூர்த்தி கூறும்போது, "நான் ஒரு விவசாயி என்பதால், பொதுமக்கள் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்க எண்ணினேன். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே, நான் காய்கறிகளை வாங்கி வந்து பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பட்டினியால் இறப்பதைவிட சொந்த ஊருக்கே போறோம்... கோயம்பேட்டை மிஞ்சி... டெல்லி பேருந்து நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தொழிலாளர்கள்... அதிரவைக்கும் வீடியோ!
- ‘அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனா பரவலில்’... ‘இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது?’...
- "அடேய் கொரோனா உன்னால ஒரு நன்மைடா?..." "ஃபேக்டரி எல்லாம் லீவு விட்டதால..." "காற்று சுத்தமாயிடுச்சு..."
- 'நிறைமாத கர்ப்பிணி'... 'எந்நேரமும் பிரசவம் என்ற நிலை'... 'இந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிக்காக'... ‘இளம் பெண் விஞ்ஞானியின் அசரடிக்கும் சாதனை’!
- 'விராட் கோலி'யின் 'தலைமுடியை'... 'கொத்தாக' பிடிக்கும் 'தைரியம்'... 'அனுஷ்கா சர்மாவுக்கு' மட்டுமே 'உண்டு'...
- 'கொரோனா பாதிப்பு 42 ஆக உயர்வு... ‘10 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு'... 'சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை'!
- ‘அடையாளம் தெரியாத அவரதான் தேடிட்டு இருக்கோம்’... ‘லாக்டவுனுக்கு’ முன்... ‘வாடிக்கையாளர்’ கொடுத்து சென்ற ‘வேறலெவல்’ இன்ப ‘அதிர்ச்சி’...
- 'நிம்மதியாவே இருக்க முடியாதா'...'புதுசா கிளம்பியிருக்கும் தலைவலி'... விழி பிதுங்கி நிற்கும் சீனா!
- ‘கொரோனா’ அச்சுறுத்தலால் ஏற்படும்... தேவையற்ற ‘பயத்தை’ போக்க... ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வழங்கும் ‘புதிய’ சேவை...
- 'ஐயோ வேண்டாம் டா கண்ணா'... 'கட்டிப்பிடிக்க ஓடி வந்த மகன்'... நொறுங்கி போன டாக்டரின் வீடியோ!