கடைசியா 'அந்த முகத்த' கண்ணீரோடு பார்த்தது...! 'அன்னைக்கு உட்கார்ந்த மனுஷன்...' '20 வருஷமா' அந்த இடத்த விட்டு 'நகரவே' இல்ல...! - நெஞ்சை 'உருக' வைக்கும் நிகழ்வு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டம், மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகாயின் (70) என்பவரது மகன் நாகராஜன் (40). கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்புக்கு செல்லாமல், கோயம்புத்தூருக்கு சென்று அங்குள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்துள்ளார்.

அப்போது கேரளாவைச் சேர்ந்த பெண் மீது காதல் ஏற்பட்டுள்ளது. தான் கடைசி மகன் என்பதால் உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் முடிந்த உடன் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று காதலியைத் தனது சொந்த ஊரான மூலங்குடிக்கு அழைத்து வந்துள்ளார். 

விஷயத்தை கேள்விப்பட்ட காதலியின் உறவினர்கள் பெரிய கும்பலாக காரில் வந்து அவரது காதலியை அழைத்துச் சென்றுவிட்டனர். நாகராஜனை பிரிய மனமில்லாமல் கண்ணீரோடு பெற்றோருடன் சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது.

அதன் பிறகு, தன் காதலி எப்படியும் வந்துவிடுவார் என்று சாலையிலேயே நின்று பார்த்தவர், பின் அங்கிருந்து ஊர் முனையில் உள்ள சாலையோரம் ஒரு சிறிய குன்று காணப்பட்டது. நேராக அங்கு போய் அமர்ந்துக் கொண்டார், தனது தாய் அழைத்தும் வரவில்லை. புயல், மழை, சுட்டெரிக்கும் அக்கினி வெயில் என எந்த இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அந்த குன்றைவிட்டு நகராமல் அங்கேயே தங்கினார்.

எப்போதும் அந்த பாறையில் அமர்ந்துக்கொண்டு ஊருக்குள் வரும் வாகனங்களை பார்த்துக் கொண்டே இருப்பார். நூறு நாள் பணிக்குச் சென்று குடும்பத்தைக் கவனிக்கும் அவரது எழுபது வயது அம்மா தான் தினசரி உணவுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

இப்படியே ஒருநாள் காதலி வருவார் என்ற நம்பிக்கையில் 20 வருடங்களாக யாரிடமும் பேசாமல் காத்திருந்ததால் தற்போது தீவிரமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மாவட்ட மனநல மருத்துவ ஊழியர்கள், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவரது அம்மா நாகாயி கூறும்போது, “எனக்கும் வயசாகிடுச்சு. நூறு நாள் வேலை செய்து இதுவரை உணவு ஆக்கி போட்டேன். அவனுக்குப் பல இடங்களில் வைத்தியம் பார்த்துட்டோம். இனிமேலாவது நல்ல முறையில சிகிச்சை கொடுத்து என் மகன் முன்பு இருந்தது போல் ஆகணும். ஏதாவது அரசாங்க உதவி கிடைத்தால் உதவியாக இருக்கும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்