‘குழந்தைக்கு பால் வாங்க கூட வழியில்லை’.. ‘நெறைய கஷ்டத்தை பாத்திருக்கோம், ஆனா இது..!’.. செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வேதனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருள்கள் இல்லாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட காந்திநகர் 6ம் வீதியில் உள்ள 70 குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலை அருகே சாலையோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு தினமும் கிடைக்கும் ரூ.100, ரூ.200 வருமானத்தை வைத்து வாழ்க்கையை நகர்த்தி வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் சிரமப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த அவர்கள், காந்திநகர் பகுதியில் 70 குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழிலை மட்டுமே நம்பி உள்ளோம். எங்களுக்கு வேறு ஏதும் தொழில் தெரியாது. வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்திருந்தாலும், தற்போது உள்ள ஊரடங்கு, இதுவரை கண்டிராத வறுமையை தந்துள்ளது. வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு லிட்டர் பால் வாங்கக் கூட வழியின்றி தவித்து வருகின்றோம்.
அரசு கொடுத்த பத்து கிலோ அரிசியும், ஆயிரம் ரூபாய் பணத்தையும் வைத்து எவ்வளவு நாளைக்கு உணவு உண்ண முடியும். குடிப்பதற்கு தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தன்னார்வலர்களும், மாவட்ட நிர்வாகவும் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதுவரை' சந்தித்திராத 'படுமோசமான' நிலைக்கு தள்ளப்பட்ட 'அமெரிக்கா!'.. 'ஒரே நாளில்' தேசத்தையே புரட்டிப்போட்ட 'கொரோனா'!
- கொரோனாவுக்கு எதிரான 'போர்ல' சாதிச்சிட்டோம்... அடுத்து நம்ம 'டார்கெட்' இதுதான்... வெளிப்படையாக அறிவித்த சீன அதிபர்!
- 'சென்னையை' பொறுத்தவரை 'இங்க' தான் பாதிப்பு அதிகம்... ஆனாலும் 'சாயங்காலமானா' ஆரம்பிச்சிடுறாங்க!
- ஒரே மாசத்துல மக்கள் இப்டி 'தலைகீழா' மாறிட்டாங்க... அப்போ இனி 'இந்தியாவோட' வளர்ச்சியை... யாராலயும் தடுக்க முடியாது போல!
- ஊரடங்கால் தூய்மையான 'புண்ணிய' நதிகள்... அதைவிட இந்த 'அதிசயம்' தான் செம ஹைலைட்!
- அமெரிக்கா 'லேட்டஸ்டா' தான் சொன்னுச்சு... ஆனா தமிழர்கள் 'பல்லாயிரம்' வருஷத்துக்கு முன்னாடியே... மத்திய குழுவை 'வியக்க' வைத்த கபசுரக் குடிநீர்!
- 'லாக்டவுனுக்கு' முன்பே கிளம்பிய 'அறைத்தோழிகள்!'.. அபார்ட்மெண்ட்டில் 'அழுகிய' நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'இளம்' விமான பணிப்பெண்ணின் 'சடலம்!'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து'... 'முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்'... 'மருத்துவ நிபுணர் குழுவின் முக்கிய தகவல்'!
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?