'வாடகை கேட்க வந்த ஹவுஸ் ஓனரை...' 'உச்சக்கட்ட டென்ஷனில்...' - குத்தி கொலை செய்த இளைஞர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வாடகை கேட்க வந்த ஹவுஸ் ஓனரை...' 'உச்சக்கட்ட டென்ஷனில்...' - குத்தி கொலை செய்த இளைஞர்...!

புதுச்சேரி மாவட்டம் பாக்குமுடையான்பேட் ஜீவா காலனியை சேர்ந்த புருஷோத்தமன் தனக்கு சொந்தமான 5 வீடுகளில் 4 வீட்டை வாடகை விட்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் குடியிருக்கும் இறைச்சி கடையில் தொழிலாளியாக இருக்கும் அருண் என்பவர் கடந்த சில மாதங்களாக சரியாக வருமானம் இல்லையென வாடகை பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக மாதா மாதம் அருணுக்கும் வீட்டு உரிமையாளர் புருஷோத்தமனுக்கும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு புருஷோத்தமன் வாடகை கேட்பதற்காக அருண் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இம்முறை ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, வீட்டில் இருந்த அரிவாளால் வாடகை கேட்டு வந்த வீட்டு உரிமையாளர் புருஷோத்தமனை சரமாரியாக குத்தியுள்ளார் அருண். சம்பவ இடத்தில் துடிதுடித்து கீழே விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின்படி சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசமாக புருஷோத்தமன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோரிமேடு போலீசார் இறைச்சிக்கடை தொழிலாளி அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்