‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் கணவருடன் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாவட்டம் ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவருடைய மகள் செல்வி (22). இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், பிரவசத்திற்கு தாய் வீட்டிற்கு வந்த செல்வி பிரசவத்திற்குப் பிறகும் அங்கேயே தங்கியிருந்துள்ளார். அவருடைய கணவர் சரவணன் அவ்வப்போது வந்து அவரையும் குழந்தையையும் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டின் 2வது மாடிக்குச் சென்ற செல்வி, தனது கணவருடன் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் குழந்தை தவழ்வது, சாப்பிடுவது, பேசுவது பற்றியெல்லாம் கணவரிடம் சந்தோஷமாகக் கூறி சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கணவரிடம் பேசிக்கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் செல்வி தான் எங்கு நிற்கிறோம் என்பதை மறந்து, உயரம் குறைவாக இருந்த கைப்பிடிச் சுவர் அருகே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர் கைப்பிடிச் சுவரில் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.
2வது மாடியில் இருந்து விழுந்ததால் படுகாயம் அடைந்திருந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தூங்காமல்’ அடம்பிடித்த ‘8 வயது’ சிறுவனுக்கு நடந்த கொடூரம்... நண்பருடன் சேர்ந்து ‘தந்தை’ செய்த அதிர்ச்சி காரியம்...
- காதலனின் ‘திருமணத்தை’ நிறுத்த... 2 வயது ‘குழந்தையை’ பிடித்து... இளம்பெண் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்...
- மனைவி காட்டிய ‘இரக்கத்தால்’... கணவருக்கு அடித்த ‘அதிர்ஷ்டம்’... ஒரே நாளில் மாறிய ‘வாழ்க்கை’...
- ‘கல்யாணமாகி‘ 2 வாரம் தான்... அதுக்குள்ள எப்படி?... ‘மாமியாரின்’ வார்த்தையால்... கலங்கிய ‘இளம் பெண்’!
- அமெரிக்க ‘வரலாற்றில்’ முதல்முறையாக... ‘மேயர்’ ஆன 7 மாத ‘குழந்தை’ சார்லி!...
- ‘10 ஆண்டுகளாக’ கணவரை ‘ஃப்ரீசருக்குள்’ வைத்திருந்த மனைவி... ‘உடலுடன்’ கிடைத்த கடிதம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...
- ஒட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்... 18 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை... ஆனந்த கண்ணீரில் மிதந்த தாய்!
- குழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்!’...
- இறப்பதற்கு முன் வந்த ‘வீடியோ’ கால்... தப்பிச் சென்ற ‘மர்ம’ நபர்... ‘திருமணமான’ 3 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...
- ‘உதவிக்கு யாரும் இல்ல’!.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’!.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..!