இயற்கை கழிவுகளிலிருந்து அவதார் கேரக்டர் பொம்மைகள்.. மாஸ் காட்டிய அரசுப்பள்ளி மாணவர்கள்..! Avatar The Way Of Water

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 2009 ஆம் ஆண்டு  ‘டைட்டானிக்’ பட புகழ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார்.

Advertising
>
Advertising

Also Read | பெற்றோர் வர தாமதம் .. சாலையில் தனியாக காத்திருந்த மாணவி.. நெகிழ வைத்த காவல்துறை அதிகாரியின் செயல்..!

இதை அடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் டிசம்பர் 16-ம் தேதி இரண்டாம் பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' வெளியாகவுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் இள்ள வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் நவநீத கிருஷ்ணன், சந்தோஷ் ஆகிய மாணவர்கள் இருவரும் வெளியாகவிருக்கும் அவதார்-2 படத்தின் கேரக்டர் ஐகான்களை பொம்மைகளாக உருவாகியுள்ளனர்.

"அழிவின் உயிர்ப்பு" என்கிற பெயரில் இந்த பள்ளியில் கலைக்கூடும் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கிராம பகுதிகளில் வீணாகும் சுரக்காய் குடுவை, தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் உலர்ந்த இலை, பூ மற்றும் மட்டைளை கொண்டு இவற்றைக் கொண்டு கைவினைப் பொருட்களை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த மாணவர்கள் கிராமப்புறங்களில் கிடைக்கும் சோளம், இலை, தென்னை, குறும்பு, மூங்கில், மர பட்டைகளை கொண்டு "வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம்" என்கிற விழிப்புணர்வு பொம்மையை வடிவமைத்திருந்தபோது வைரலாகினர். இதேபோல் இவர்கள் உருவாக்கிய ழகரம் ஏந்திய தமிழன்னை பொம்மையும் அந்த சமயத்தில் பிரபலமானது.

Also Read | Rachitha : “இன்னும் 3 வருஷம்தான்.. அந்த ஒரு விஷயத்துக்கு..”.. குழந்தைகள் பற்றி பிக்பாஸில் ரச்சிதா உருக்கம்.! bigg boss 6

STUDENTS, TELENT, MOTIVATIONAL, INSPIRATIONAL, AVATAR 2, AVATAR THE WAY OF WATER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்