"இனிமே 'இ பாஸ்' எல்லாம் தேவையில்ல"... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட 'மாநிலம்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், மாநிலங்களுக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.

தமிழகத்தில் முன்னதாக, அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ பாஸ் அளிக்கப்பட்டு வந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது. புதுச்சேரிக்குள் நுழையவும், புதுச்சேரியில் இருந்து வெளியே செல்லவும் இ பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்