‘கூலித்தொழில்.. உல்லாச வாழ்க்கை’.. வாகன சோதனையில் சிக்கிய இருவர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பைல்சர் இருசக்கர வாகனங்களை குறி வைத்து இரு இளைஞர்கள் திருடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட பல்சர் இருசக்கர வாகனங்களை திருடி போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்றிரவு புதுச்சேரி 100 அடி சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருசக்கர வாகனத்திற்கான உரிய சான்றிதழ்களை கேட்டபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (வயது 38), சிலம்பரசன் (வயது 37) என்பதும், அவர்கள் ஒட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு கூலித்தொழில் செய்ய வரும் இவர்கள் முதலியார்பேட்டை, உருளையான் பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல்சர் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து சங்கர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 பல்சர் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டிற்கும், பைக் திருடும் பணத்தை மது குடிக்கவும், ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தி வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.
Also Read | “நீ சின்னப் பையன், அது மாதிரி நடந்துக்கோ”.. ஹர்சல் படேலுடன் சண்டை.. முதல் முறையாக ரியான் பராக் விளக்கம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்ன 500ரூபா நோட்டு வித்தியாசமா இருக்கு?".. கடைக்காரருக்கு வந்த சந்தேகம்.. வசமாக சிக்கிய பலே திருடன்..!
- சென்னையில் இருந்து ஊருக்கு போன கொஞ்ச நாள்ல அப்பா மரணம்.. கைதான மகன் சொன்ன ‘திடுக்கிடும்’ தகவல்..!
- சென்னையில் முதல்வர் கான்வாயை பைக்கில் முந்திச் சென்ற இளைஞர்.. போலீசார் பிடித்து விசாரித்ததில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!
- ‘இதனால தான் அப்படி பண்ணேன்’.. மனைவி மரண வழக்கில் கணவர் பரபரப்பு வாக்குமூலம்..!
- மனைவி வீட்டுல இல்ல..தோட்டத்துல கேட்ட வினோத சத்தம்.. கணவன் செஞ்ச பகீர் காரியத்தால் பதறிப்போன போலீஸ்..!
- மண்டை மேல இருந்த கொண்டைய மறந்த திருடன்.. வழக்கை முடிச்சுவச்ச ஒரேயொரு போட்டோ..!
- கொள்ளை நடந்த வீட்டில் கிடச்ச செல்போன்.. உள்ளே இருந்த போட்டோ.. சென்னையில் நடந்த துணிகரம்..!
- ‘9 மாசமா கணவரை காணோம்’.. கைதான மனைவி கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
- “கடைசியா ஒரு தடவை பேசணும்”.. நம்பி போன இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கைதான காதலன்..!
- 8 ஆண்டுகள் தலைமறைவு.. சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கணவன்.. சென்னையை பரபரப்பாக்கிய வழக்கு..!