‘அம்மாவை பார்க்க 480 கிமீ சைக்கிளில் வந்த மகன்’.. தாயை பார்த்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உடல்நிலை சரியில்லாத தாயை பார்க்க மகன் 480 கிலோமீட்டர் சைக்கிளில் வந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்த ரேவு ஸ்ரீனியின் தாய் மகாலட்சுமி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்த அவரது உறவினர்கள் மகன் ரேவு ஸ்ரீனிக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே தாயை பார்க்க வேண்டும் என ரேவு ஸ்ரீனி நினைத்துள்ளார்.
ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்து, ரேவு ஸ்ரீனியும், அவரது மனைவியும் தனித்தனியாக சைக்கிள் பயணத்தை தொடங்கினர்.
கடந்த 14ம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர்களை வழியில் பல இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்து விசாரித்துள்ளனர். அப்போது தனது தாயின் உடல்நிலை குறித்த தகவல்களை ரேவு ஸ்ரீனி தெரிவித்ததும், போலீசார் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்துள்ளனர். வழியில் பல கிராமங்களில் மக்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற உதவிகளை செய்துள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 480 கிலோமீட்டர் பயணம் செய்து கடந்த 17ம் தேதி நள்ளிரவு புதுச்சேரி வந்துள்ளனர். அங்கு அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர். பின்னர் 18ம் தேதி தாயை பார்க்க அனுமதி அளித்தனர். உடனே ரேவு ஸ்ரீனி வீட்டிற்கு சென்று உடல்நிலை சரியில்லாத தாயை பார்த்துள்ளார். தனது மகனை பார்த்த சில நிமிடங்களில் தாய் மகாலட்சுமியின் உயிர் பிரிந்தது.
இதனை அடுத்து சோகத்துடன் தாயின் இறுதிச்சடங்கை முடித்து, பின்னர் தனது மனைவியுடன் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
'அது' உண்மையில் 'UFO' தானா?.. பரபரப்பு 'வீடியோ' சர்ச்சைக்கு 'அமெரிக்க' கடற்படையின் 'ஆச்சர்ய' பதில்!'
தொடர்புடைய செய்திகள்
- "ஆஸ்பத்திரிக்கு போகணும்ங்க".. லாக்டவுனில் நடந்து வந்த கர்ப்பிணி.. போலீஸாரின் உச்சகட்ட மனிதநேயம்.. நெகிழவைத்த வீடியோ!
- ‘அம்மா..அம்மா..’!.. வீடியோ காலில் கதறியழுத ராணுவ வீரர்.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்.. ஊரடங்கில் நடந்த சோகம்..!
- "போராட்டக்களத்தில் ஒரு குட்டி ரிலாக்ஸ்"... "அறுபது மருத்துவர்கள்" ஒன்றிணைந்து... மக்களின் நலனுக்காக வெளியிட்ட 'கூல்' வீடியோ!
- '2025' வரை பல ஊழியர்களுக்கு "Work From Home" தான்!.. பிரபல 'ஐ.டி' நிறுவனம் 'அதிரடி' முடிவு?.. என்ன 'காரணம்' தெரியுமா?
- 'கொரோனாவை இப்படித்தான் சிறப்பா விரட்டியடித்தோம்'... ‘இப்போ ஜெயிச்சிட்டோம்’... ‘நள்ளிரவு முதல் லாக் டவுனை தளர்த்தும் பெண் பிரதமர்’!
- "யாரா இருந்தா என்ன.. வெளில வர்லாமா?".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...
- மே 3க்குப் பிறகு என்ன செய்யலாம்?.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா?.. பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான 'முக்கிய' தகவல்!
- 'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’!
- "இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா?..." 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'