'புதுச்சேரி கலெக்டருக்கு நச்சு கலந்த குடிநீர் கொடுக்கப் பட்டதா?'.. ‘வாட்ஸ் ஆப்பில் தீயாய் பரவும் கிரண்பேடியின் தகவல்!’.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நச்சு கலந்த குடிநீரை புதுச்சேரி பெண் ஆட்சியருக்கு விநியோகம் செய்ததாக ஆளுநர் கிரண் பேடி சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், சிபிசிஐடி போலீஸார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி ஆட்சியராக இருந்த அருண், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமுறையில் போனதை அடுத்து, அவருக்குப் பதிலாக பூர்வா கார்க் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நச்சுத் தன்மை உடைய குடிநீர் விநியோகிக்கப் பட்டிருப்பதாக வாட்ஸ்-அப் மூலம் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இது தொடர்பாக தகவல் அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேரிடர் மற்றும் வருவாய்துறையின் சிறப்பு அதிகாரி சுரேஷ்ராஜ், தன்வந்திரி காவல் நிலையத்தின் நிலைய அதிகாரிக்கு அனுப்பிய புகார் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ஆட்சியர் அலுவலக ஊழியர்களில் ஒருவர், தனியார் நிறுவனத்தின் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரைக் கொடுத்துள்ளார். ஆட்சியர் அதனைக் குடிக்கத் திறந்தபோது, நிறமற்ற நச்சுத்தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயல் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பிரிவின் விசாரணை அதிகாரிகள் கூறும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், கைகளில் தடவும் சானிடைசரை 5 மற்றும் 10 லிட்டர் கேன்களில் மொத்தமாக வாங்கி, சிம்ம பாட்டில்களில் ஊற்றி வைத்து பயன்படுத்துவது வழக்கம். அப்படி, குடிப்பதற்காக ஆட்சியர் அந்த பாட்டிலை திறந்தபோது சானிடைசர் வாசம் வந்ததாகவும், எனினும் தண்ணீர் பாட்டிலில் சானிடைசர் ஊற்றிய ஊழியர் யார் என விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த செயலை செய்தவர் மீது மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கவனக்குறைவாகக் கையாளும் குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டம் 284-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் முழுமையான விசாரணைக்கு பிறகே முடிவுக்கு வரமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எங்க நமக்கும் கொரோனா வந்திடுமோ...?! 'காச பார்த்தா உயிர் வாழ முடியாது...' - உச்சக்கட்ட கொரோனா பயத்தில் 'வேற லெவல்' முடிவு எடுத்த நபர்...!
- திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!
- "ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கக் கூடாது!".. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பீட்டா அமைப்பு!.. தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!!
- 'தமிழகத்தின்' இன்றைய (07-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?... முழு 'விவரம்' உள்ளே...!
- கொரோனா அதிகமாக தாக்குவது ‘இவர்களை’ தான்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
- மேட்ச் பார்க்க வந்த ‘ரசிகருக்கு’ கொரோனா.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.. ‘அதிரடி’ நடவடிக்கை..!
- 'தமிழகத்தின்' இன்றைய (06-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?... முழு 'விவரம்' உள்ளே...!
- 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!?.. அவசர அவசரமாக தமிழக அரசுக்கு... மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்!.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
- 'தடுப்பூசி போட்டப்போ...' 'மொதல்ல எந்த பக்க விளைவுகளும் தெரியல...' 'ஆனா...?!!' - போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த சோகம்...!
- 10 லட்சம் பேருக்கு காத்திருக்கும் ஆபத்து!.. இந்த கொரோனாவால இன்னும் எத்தனை கொடுமைய பார்க்கணுமோ!?.. சிக்கித் தவிக்கும் இந்தியா!!