'அலறிய சுபஸ்ரீ'...'தாமதமான ஆம்புலன்ஸ்'... 'எப்படியாவது காப்பாத்தணும்'...லோடு ஆட்டோ'வில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அங்கே வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனிடையே அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,, சுபஸ்ரீ விபத்தில் சிக்கி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சுபஸ்ரீ விபத்தில் சிக்கியுடன் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அப்போது அருகில் இருந்தார்கள் சுபஸ்ரீக்கு உதவியுள்ளார்கள். உடனே 108ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆக, அங்கிருந்த லோடு ஆட்டோவில்  சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

சுபஸ்ரீயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அங்கிருந்தவர்கள் முயன்றுள்ளார்கள். விபத்து நடந்து 15 நிமிடங்கள் அவர் உயிருடன் இருந்துள்ளார். ஆனால் இறுதியில் அனைத்து முயற்சியும் தோல்வியுற்று சுபஸ்ரீயின் உயிர் பறிபோனது. அவரை லோடு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைத்துள்ளது.

AIADMK, CCTV, SUBHASRI RAVI, JAYAGOPAL, ILLEGAL BANNER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்