'என்னங்க சொல்றீங்க'... 'ஒரு மாச வருமானம் இத்தனை லட்சமா'?... 'மனைவி சொன்ன பல அதிர்ச்சி தகவல்கள்'... தோண்ட தோண்ட வரும் ரகசியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாசமாக யூ-டியூப் சேனலில் பேசிவந்ததாகத் தேடப்படும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டைச் சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையச் சேவை மூலம் பயன்படுத்தி சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக பப்ஜி மதன்மீது புகார்கள் எழுந்தது. அதனையொட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனைத் தேடிவந்தனர். அவர்மீது தமிழகம் முழுவதும் 159 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவில் நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட சைபர் ஆய்வகம் இருப்பதால், தொழில் நுட்ப உதவியுடன் தப்பிக்கும் மதனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பெருங்களத்தூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து மதனின் தந்தை மாணிக்கம் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகாவை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழைத்துவந்தனர். இன்று காலையிலிருந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபிறகு, மதனின் மனைவி கிருத்திகாவை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அப்போது கிருத்திகா பல அதிர்ச்சி தகவல்களை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
மதன் நடத்தும் சேனலின் நிர்வாகியாக கிருத்திகா இருந்து வந்துள்ளார். அதோடு மதனின் நடவடிக்கைகள் அனைத்தும் கிருத்திகாவுக்குத் தெரிந்தே நடந்துள்ளது. மேலும், மதன் ஆபாசமாகப் பேசும்போது எதிர்த்தரப்பில் பேசும் பெண்ணின் குரல் அவருடைய மனைவியினுடையது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மதனுக்கு யூ-டியூப் மூலம் மட்டும் மாதம் தோறும் 7 லட்ச ரூபாய் வருமானம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இரண்டு உயர் ரக சொகுசு கார்களை மதன் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த கார்களை பறிமுதல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகாரளிக்க முன்வர வேண்டும் எனவும், புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூறியுள்ளது. அதே நேரத்தில் மதனின் மனைவி கிருத்திகாவிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு கோடி இரண்டு கோடி இல்ல சார், 100 கோடி'... 'பரிதவித்து நிற்கும் தொழிலதிபர்கள்'... ஹரிநாடார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
- 'திடீரென மாயமான மனைவி'... 'கணவனின் Whatsappக்கு வந்த புகைப்படங்கள்'... 'ஒரே ஒரு டயலாக் தான்'... 3 குடும்பத்தை கதிகலங்க வைத்த பெண்!
- 'அந்த' யூடியூப் சேனலை 'ஸ்டாப்' பண்ணுங்க...! 'அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்...' - யூடியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்...!
- '27 வயதில் டி.எஸ்.பி'... 'தடைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்த இளம்பெண்'... யார் இந்த ரசியா சுல்தான்?
- பூட்டி இருந்த வீடு!.. தடாலடியாக நுழைந்த போலீசார்!.. சாராய வேட்டைக்குச் சென்ற இடத்தில்... திருடர்களாக மாறிய காவலர்கள்!.. பதறவைக்கும் பின்னணி!
- போலீஸ் 'கண்ட்ரோல்' ரூமுக்கு வந்த போன்கால்...! 'என்ன மேட்டர்னு கேட்டுட்டு ஸ்பாட்டுக்கு போனா...' 'அப்படி ஒரு சம்பவமே நடக்கல...' - கடைசியில நடந்த 'அதிரடி' ட்விஸ்ட்...!
- 'உங்க English மோசமா இருக்கு'... 'கிண்டலடித்த நெட்டிசன்'... 'நான் வேளச்சேரியில் ஒரு BPOக்கு Interview போனேன்'... என்ன சொன்னாங்க தெரியுமா?... வைரலாகும் ஐபிஎஸ் அதிகாரியின் நச் பதில்!
- VIDEO: என்ன பார்த்து 'ஏய்'னு சொல்றியா...!? 'மவனே... உன் யூனிஃபார்ம் கழட்டிடுவேன்...' யாருக்கிட்ட...? 'போலீசாரிடம் எகிறிய பெண்...' - வைரல் வீடியோ...!
- 'என்னோட கல்யாணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்'... இளைஞர் சொன்ன அதிர்ச்சி காரணம்!
- 'சும்மா நை நைன்னு அப்பா திட்டிக்கிட்டே இருக்காரு'... 'அதுக்குன்னு செய்கிற வேலையா டா இது'... போலீசாரையே நடுங்க வைத்த இளைஞர்!