'சென்னை கொண்டு வரப்பட்ட பப்ஜி மதன்'... 'கோபத்தில் பத்திரிகையாளர்களைப பார்த்து கேட்ட கேள்வி'... போலீசார் கொடுத்த பதிலடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்

'சென்னை கொண்டு வரப்பட்ட பப்ஜி மதன்'... 'கோபத்தில் பத்திரிகையாளர்களைப பார்த்து கேட்ட கேள்வி'... போலீசார் கொடுத்த பதிலடி!

பப்ஜி விளையாட்டை இணையத்தில் சட்டவிரோதமாக விபிஎன் முறையைப் பயன்படுத்தி விளையாடியதாகவும், அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு போலீசில் கடந்த 14ஆம் தேதி புகார்கள் முன்வைக்கப்பட்டன.

Pubg Madan nabbed by in Dharmapuri and brought to chennai

இதையடுத்து சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசுதல், பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அன்றைய தின​மே மதன் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்த போலீசார், அங்கு விரைந்தனர். ஆனால் சேலத்திலிருந்து மதன் தலைமறைவான நிலையில் அவரின் மனைவி கிருத்திகா மற்றும் மதனின் தந்தையைச் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதன் நடத்தி வந்த யூட்யூப் சேனல்களுக்கு கிருத்திகா தான் நிர்வாகி என்பதும், ஆபாசமாக மதனுடன் பேச்சை ஆரம்பித்து வைப்பது எல்லாம் கிருத்திகா தான் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், பல நாட்களாகத் தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பப்ஜி மதனின் செல்போன், லேப்டாப் மற்றும் வங்கி ஆவணங்கள் குறித்து விசாரணை செய்து வந்த நிலையில் சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், பப்ஜி மதனை மதனை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்கள் அவரை படம் பிடித்தனர்.

அப்போது ஒளிப்பதிவாளர்களைப் பார்த்து 'நான் என்ன பிஎம் -ஆ ஏன் என்னை வீடியோ எடுக்குறீங்க? என பப்ஜி மதன் கோபமாகக் கேட்டுள்ளார். அதற்கு அருகிலிருந்த காவல் ஆய்வாளர் ''நீ அக்யூஸ்ட் வாயா'' என்று காட்டமாகக் கூறி கூட்டிச் சென்றாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்