'மாசித்' திருவிழாவில் 'பப்ஜி' 'சாம்பியன்ஷிப்' போட்டி... முதல் 'பரிசு' ஒரு லட்சமாம் ... விட்றா வண்டிய 'சிவகங்கைக்கு'... படையெடுக்கும் 'பப்ஜி வெறியர்கள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கையில் மாசித் திருவிழாவின் ஒரு பகுதியாக பப்ஜி விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் என தனியார் செல்போன் கடை ஒன்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளது.

பப்ஜி என்ற மொபைல் விளையாட்டுதான் தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் டிரெண்டாகி உள்ளது. இதில் சில இளைஞர்கள் அளவு கடந்து மூழ்கி தங்கள் வாழ்வைத் தொலைக்கும் சோகமும் நடந்தேறியுள்ளது.  இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் மாசித் திருவிழாவையொட்டி பப்ஜி சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும் என தனியார் செல்போன் கடை ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், 2வது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளது.

மாசித்திருவிழாவில் சிலம்பம், ஜல்லிக்கட்டு,  போன்ற வீர விளையாட்டக்கள் நடத்தப்படுவது வழக்கம். அனால் புதுமையாக பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்தியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இப்போட்டியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பையடுத்து இளைஞர்கள் பெரும்பாலானோர் சிவகங்கைக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

PUBG, SIVAGANGAI, CELLPHONE SHOP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்