பாலியல் புகாரில் கைதான... PSBB பள்ளி ஆசிரியருக்கு... வலுக்கும் சிக்கல்!.. காவல்துறை அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாலியல் குற்றச்சாட்டில் கைதான சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கில் காவல்துறை அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பாலியல் புகாரில் கைதான... PSBB பள்ளி ஆசிரியருக்கு... வலுக்கும் சிக்கல்!.. காவல்துறை அதிரடி நடவடிக்கை!

சென்னை கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்ட புகாரில், போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கே.கே. நகர் அனைத்து மகளிர் போலீசாரால் மே 24 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வரிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். மாநில அரசு விரும்பினால் முன்கூட்டியே விடுதலை செய்யலாம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்