‘கறிக்கடை திறக்க தடை’.. ‘வாரத்துக்கு 3 நாள் மட்டுமே மளிகைக்கடை திறந்திருக்கும்’.. மாவட்ட ஆட்சியர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வெளிமாநிலம், வெளிநாடு செல்லாதா வேலூர் மாவட்டத்தை 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார்.
அதன்படி மளிகை கடைகள் அனைத்தும் திங்கள், வியாழன், ஞாயிறு என வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஊரடங்கு முடியும் வரை இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையான பால் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.
இவை தவிர காய்கறிகடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள், பெட்டிகடைகள் எதுவும் திறக்கும் கூடாது. மருந்து கடைகள் வழக்கம்போல இயங்கும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில்' இன்று புதிதாக 'எத்தனை' பேருக்கு கொரோனா பாதிப்பு?... 'சிகிச்சை' பெற்று வருபவர்களின் 'நிலை' என்ன?... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...
- ‘அவரை மாதிரி எல்லா நடிகர்களும் உதவ முன்வரணும்’.. நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்..!
- ‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க?’...!
- 'விடுமுறையால்' ஊரில் இருந்தபோது... கண் 'இமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கிராமத்தையே 'சோகத்தில்' ஆழ்த்தியுள்ள சம்பவம்...
- ‘உலகை அழிக்கணும்னா 5 நாள்லயே செஞ்சு காட்டிருப்பாங்க’.. ‘கொரோனா நடத்தியிருக்கும் பெரும்பாடம்’.. சீமான் ட்வீட்..!
- 'இது தான் நடந்துச்சு!'... 'நாங்க இப்படி தான் கொரோனாவ கட்டுப்படுத்தினோம்!'... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீனா!
- 'எதிரிக்கு கூட இப்படி ஒரு சாவு வரக்கூடாது'...'வீட்டு வாசலில் கிடக்கும் சடலங்கள்'...'சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள்'!
- 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'லாபம்' சம்பாதிக்கும் ஒரே 'இந்திய' தொழிலதிபர்!... என்ன 'காரணம்?'...
- ‘ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சுடும்’.. கொரோனா கண்டறியும் புதுசோதனை முறை அறிமுகம்..! திருப்பூர் கலெக்டர் அசத்தல்..!
- ‘அனுமன்’, லஷ்மன் உயிரை காப்பாத்த... ‘சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உதவியதுபோல’... ‘எங்க நாட்டுக்கு ‘அந்த’ மருந்தை தாங்க’... பிரதமர் மோடிக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதிய அதிபர்!