'ரிட்டர்ன்'லாம் அனுப்ப முடியாது...! 'பாவம்ல, அது இங்கயே இருக்கட்டும்...' பூனையை சீனாவிற்கு திருப்பி அனுப்புவதில் புதிய சிக்கல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்த பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக எழுந்துள்ள சந்தேகம் தற்போது மேலும் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கண்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, விளையாட்டு பொம்மைகள் அதிகம் நிரம்பிய கண்டெய்னர் ஒன்றில் விலங்குகள் பிரத்யேகமாக கொண்டுவரப்படும் கூண்டில் பூனை இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பூனை எங்கிருந்து வந்ததோ அங்ககேயே திருப்பி அனுப்பிவிட சுகாதாரத்துறை அதிகாரிகள் துறைமுக நிர்வாகத்தை அறிவுறுத்தினர். ஆனால் பூனையை திருப்பி அனுப்பக் கூடாது என விலங்குகள் நல அமைப்பான பீட்டா துறைமுக நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும், செல்லப்பிராணிகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு வருவதில்லை என அமெரிக்க கால்நடை பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலை பீட்டா சுட்டிக்காட்டுகிறது. பூனையின் நிலை பரிதாபமாக உள்ளதாகவும், மேலும் 20 நாட்களாக உணவு, நீரின்றி கூண்டுக்குள் அடைந்துள்ள பூனை இறக்கவும் நேரிடலாம் என பீட்டா தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சளி, காய்ச்சல் மாதிரி 'அது'வும் அடிக்கடி வரும்!'... கொரோனாவின் எதிர்காலம் குறித்து விஞ்ஞானிகளின்... பதைபதைக்க வைக்கும்... ஷாக் ரிப்போர்ட்!
- 'இல்ல வேண்டாங்க, 'அது' வந்திடும்னு பயமா இருக்கு...' 'கைகுலுக்க மறுத்த மந்திரி...' 'அதிர்ச்சியடைந்த பிரதமர்...' வைரலாகும் வீடியோ...!
- ‘முத்தம் கொடுத்துக்காதீங்க ப்ளீஸ்.. ஊர் பூரா கொரோனா பரவிடப் போகுது!... மன்றாடும் அரசு!’
- 'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்!
- 'இந்த 3 நாடுகளுக்கு'... 'அநாவசியமாக செல்ல வேண்டாம்'... 'மத்திய அரசு வலியுறுத்தல்'!
- வெலைய 'பார்த்தாலே' ஷாக்கடிக்குது... தொடர்ந்து 'எகிறும்' தங்கம்... இதுக்கெல்லாம் காரணம் 'அந்த' நோய் தானாம்!
- ‘ஜெயிச்சிட்டோம்.. ஜெயிச்சிட்டோம்!’.. கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மருத்துவர்கள்.. வீடியோ!
- ‘சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனாவின் கொடூரம்!’.. ‘தேவையில்லனா பயணங்களை கட் பண்ணுங்க!’ .. ‘இந்திய அரசு வேண்டுகோள்!’
- 'அழைக்கா விருந்தாளியா கொரோனா வந்துடுமோனு ஒரு பயம் தான்!'... '220 ஜோடிகள்... ஒரே இடம்!'... 'கொரோனா' பரிதாபங்கள்!
- 'இந்தியர்களின் அடிமடியில் கைவைத்த கொரோனா'... 'கையை பிசையும் மாத சம்பளக்காரர்கள்'... என்ன நடக்கும்?