'என்ன சார் சொல்றீங்க'...'இதுல தான் சிக்கலே இருக்கு'... 'அரியர்' மாணவர்களுக்கு பாஸ் போடுவதில் எழுந்துள்ள பிரச்சனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காரணமாக அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த மாணவர்களுக்குத் தேர்ச்சி போடுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாகத் தேர்வு நடத்துவதில் பெரும் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அரியர் தேர்வுக்காகக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இது அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதது.
இந்த சூழ்நிலையில் அரியர் பாடங்களுக்குத் தேர்ச்சி என அரசு அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் வழிகாட்டுதல் ஆகும். ஆனால் அரியர் வைத்திருந்த பல மாணவர்களுக்குத் தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லை எனத் தெரியவந்துள்ளது. அதாவது பல மாணவர்கள் முந்தைய செமஸ்டர்களில் பெற்ற எக்ஸ்டர்னல் (External) மற்றும் இண்டர்னல் (Internal) மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்குத் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் விதிகளுக்கு உட்பட்டுத் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்பதால், அரியர் மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'குவாரண்டைனில் இருந்து எஸ்கேப்'... 'ஜாலியா காதலி வீட்டிற்கு வந்து கப்போர்டில் ஒழிந்த இளைஞர்'... 'இதுக்கா ஏணி புடிச்சு எஸ்கேப் ஆகி வந்தேன்'... அல்டிமேட் ட்விஸ்ட்!
- வட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு!
- 'இது எப்படி பாசிபிள்?'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்!'...
- 'தடுப்பு மருந்து விவகாரத்தில... இவ்ளோ நாள் சைலண்டா இருந்தது இதுக்கு தானா'!?.. டிரம்ப் கொடுத்த 'ஷாக்'!.. திகைத்துப்போன உலக நாடுகள்!
- '5 மாசம் பல்ல கடிச்சிட்டு இருந்தோம்'... 'சென்னையில் திறக்கப்படும் மால்கள்'... இனிமேல் ஷாப்பிங் எப்படி இருக்கும்?
- 'கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும்'... 'ஒரு புது சிக்கல் இருக்கு'... 'நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!'...
- 'இந்தியாவுல தீபாவளிக்குள்ள கண்டிப்பா'... 'தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்புக்கு நடுவே'... 'நல்ல செய்தி சொன்ன சுகாதாரத்துறை மந்திரி!'...
- 'மாசக்கணக்குல நின்னுபோன... சினிமா ஷூட்டிங்!'.. 'தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும்' அதிமுக்கிய அறிவிப்பு!
- 'நினைச்சத விட சீக்கிரமாவே தடுப்பூசி கிடைக்கலாம்'... 'எகிறும் பாதிப்பால்'... 'எப்டிஏ எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!