“ரூ.100 கோடியா..?”... “நிற்கதியில் 5 ஆயிரம் பேர்!”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க? - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுவரை ஜெயம் வெல்த் அக்ரோ லிமிடெட் என்கிற பெயரில் இயங்கிவந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமார்ந்ததாக சுமார் 100 பேர் குழுவாக திரண்டு கலெக்டரிடம் முறையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பேசிய மக்கள், தேனி நகரில் பெத்தாட்சி விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள மாடியில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தில் மாதத் தவணையாக ரூ.1000 முதல் ரூ.5000 வரை பலரும் பணம் செலுத்தியதாகவும், 5 வருடம் இதுபோல் பணம் செலுத்தினால் 125 சதுர அடி நிலம் அல்லது 5 வருடத்திற்கு மக்கள் செலுத்திய தொகைக்கு 12.5% வட்டியை சேர்த்து அந்த பணம் அவர்களிடமே திருப்பி கொடுக்கப்படும் என்று நிறுவனம் கூறியதை நம்பி சுமார் 5000 பேர் வரை அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியதாகவும், ஆனால் 5 வருடம் முடிந்தவுடன் பணம் அல்லது நிலம் எதையும் கொடுக்காமல் காரணங்களைக் கூறி மக்களை அந்த நிறுவனம் ஏமாற்ற முயன்றதால் உடனே பலரும் காவல் நிலையத்தில் புகார் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அளித்த புகாரின்பேரில், நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் என்பவரை போலீசார் பிடித்தபோது அவரோ, ‘என்னிடம் இப்போது பணம் இல்லை. எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுக்க வேண்டும். அனைவரும் பணத்தையும் திருப்பி கொடுக்கிறேன்’ என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் சொன்ன ஒரு வருடம் முடிந்து ஒரு மாதம் ஆவதால் நிறுவனத்தில் பணம் கட்டிய ஒருவருக்குகூட பணம் திரும்பி வராததால் சுமார் 100 கோடி ரூபாய் வரை சுருட்டி கொண்டு ஓடிய ராஜேஷ் என்பவரை கைது செய்து, ஏமார்ந்த ஒவ்வொருவருக்கும் உரிய நிவாரணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பலரும் கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர், ‘எப்படியப்பா இவ்ளவு பேர் ஏமார்ந்தீர்கள்?’என்று வியந்தே போயுள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவதும் கலெக்டர் உறுதியளித்தார்.

CHEAT, MONEY, THENI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்