கொரோனா விஷயத்துல... 'தனியார்' மையங்கள் கண்டிப்பா 'இதை' செய்யக்கூடாது... 'தமிழக' அரசு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பல்வேறு மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பு முறைகளும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதுதவிர மால்கள், பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் என அனைத்துமே ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா சோதனையை தனியார் மையங்கள் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேக வார்டு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும். பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தவேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான விவரங்களை சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் சுகாதார அதிகாரியிடமும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுகாதார சேவைகள் துணை இயக்குனரிடமும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ அந்த நபர் தனிமைப்படுத்துவதற்கோ அல்லது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கோ மறுப்பு தெரிவித்தால் பொது சுகாதாரத்துறை இயக்குனர், ஊரக சுகாதார சேவைகள் மருத்துவ இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள் உள்பட வரையறுக்கப்பட்ட அதிகாரிகள் அவர்களை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தவோ அல்லது சிகிச்சை பெறவோ நிர்ப்பந்திக்கவேண்டும். தனியார் பரிசோதனை கூடங்கள் கொரோனா வைரஸ் மாதிரி எடுக்கவோ, பரிசோதிக்கவோ கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' வைரஸ் ஒருவரது உடலில்... 'எத்தனை' நாட்கள் இருக்கும்?... 'புதிய' தகவலை வெளியிட்ட 'சீன' மருத்துவர்கள்!
- லேசா தும்முனாலே 'தெறிச்சு' ஓடுறாங்களா?... கொரோனாவா இல்ல 'சாதாரண' ஜலதோசமானு எப்டி கண்டுபிடிக்கிறது?... 'செக்' பண்ணிக்கங்க!
- 'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா?... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...
- 'எவ்வளவு நாள் ஆச்சு'... 'குடும்பத்தை பார்க்க ஓமனில் இருந்து வந்த வாலிபர்'...எதிர்பாராத திருப்பம்!
- 'கொரோனவால் பாதித்த காஞ்சிபுரம் என்ஜீனியர்’... ‘டிஸ்சார்ஜ் குறித்து அப்டேட் கொடுத்த’... ‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்’!
- இப்டியெல்லாம் 'பண்ணாதீங்க' நல்லால்ல... நடுக்கடலில் பாட்டில்களால் 'பயங்கரமாக' தாக்கிக்கொண்ட மீனவர்கள்!
- ‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!
- 'இந்த' வயசுல உள்ளவங்கள தான்... கொரோனா 'இஷ்டத்துக்கு' தாக்குதாம்... முழுமையான விவரம் உள்ளே!
- சிகிச்சை பலனின்றி 'என்ஜினியர்' பலி... கொரோனா வைரசால் உயிரிழந்தாரா?... வாட்ஸ்அப் 'வைரலால்' பொதுமக்கள் அதிர்ச்சி!
- ‘கொரோனா பாதித்த என்ஜினீயருடன்’... ‘தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி’...