பப்ஜி மதனின் மனைவியிடம் லஞ்சம் கேட்ட ஜெயிலர்.. வெளியான பரபரப்பு ஆடியோ.. சிறைத்துறை டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

யூடியூப் பப்ஜி கேம்மில் ஆபாசமாக பேசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதனுக்கு உதவிய சிறை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

என் புருஷன் வீட்ல இல்ல.. வெளியூர் போன நேரம் பார்த்து.. மனைவி எடுத்த முடிவினால்.. உடைந்து நொறுங்கிய கணவன்

பிரபல யூடியூப்பரான பப்ஜி மதன் தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேம்மை யூடியூப்-ல் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் விளையாடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்துள்ளார். அதோடு, அனைத்து வயதினரும் பார்க்கும் அந்த வீடியோவில் ஆபாசமாக பேசியும் வந்தார்.

பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பணமோசடி:

அதுமட்டுமில்லாமல் பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு பலரை ஏமாற்றியுள்ளார். இந்த காரணங்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை:

அதன்பின் சில நாட்களில் அவரின் மனைவி கிருத்திகா மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதோடு, மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார்.

ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ:

இந்த நிலையில் புழல் சிறையில் இருக்கும் தன் கணவர் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகளை வழங்க கோரி கிருத்திகா உதவி ஜெயிலர் செல்வம் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அதோடு உதவி ஜெயிலரும் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.

விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவு:

மேலும், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிக்கு சிறையில் சொகுசு வசதி செய்து தர  ஜி.பே மூலம் ரூ.25,000 அனுப்பியதாக தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது வைரலாகி வரும் ஆடியோவின் உண்மை தன்மை குறித்தும், விசாரணை நடத்தவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக  சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். பப்ஜி மதன் குறித்த விவகாரம் இந்த சம்பவத்தினால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்பட வேண்டும்.‌ அதிரடி காட்டிய ஐகோர்ட்.. உத்தரவின் பின்னணி

PRISON OFFICER, PUBG, PUBG MADHAN, சிறைத்துறை டிஜிபி, யூடியூப் பப்ஜி, பப்ஜி மதன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்