‘எதார்த்தமா நடந்த விஷயம்’ ‘எல்லாரும் பேனர் வைக்கிறாங்க’ சுபஸ்ரீ உயிரிழந்தது விதி என பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேனர் விழுந்து ஐடி பெண் ஊழியர் சுபஸ்ரீ உயிரிழந்தது விதி என்றும், இதை எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக பிரமுகர் தனது இல்ல திருமணத்துக்கு பேனர் வைத்திருந்தார். அப்போது சாலையில் சென்ற சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததால் பின்னே வந்த லாரி மோதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கட்சி விழாக்களில் பேனர் வைக்கப்படமாட்டாது என தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை ஆவடியில் நடைபெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குறித்து பேசிய அவர், ‘பேனர் தடையை முதலில் ஏற்றுக்கொண்ட கட்சி தேமுதிகதான். பேனர் கட்டுவதால் உயிர் போகிறது என்றால் பேனர் வேண்டாம். எதார்த்தமாக நடந்த விஷயம்தான். ஏனென்றால் இன்று பேனர் வைக்காதவர்கள் யாரும் இல்லை. எல்லோரும் வைக்கின்றனர். அப்படி இருக்கின்ற நேரத்தில் அந்த பெண் அப்போ க்ராஸ் பண்ணும் காத்துல அது (பேனர்) வந்து விழுகணும், பின்னாடியே தண்ணீர் லாரி வந்து அந்த பெண்ணின் மீது ஏறணும், இறக்கணும் என்று விதி இருந்திருக்கு’ என பேசியுள்ளார். மேலும் பேசிய அவர் அது அதிமுக பேனர் என்பதால் எதிர் கட்சிகள் பெரிதுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொடிகளை அகற்றிய இன்ஜினியர் மீது சரமாரித் தாக்குதல்’.. ‘மதிமுக தொண்டர்களால்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- 'அடுத்த முறை 1 மணி நேரம் பேசுவேன்'.. அடைமழை போல் கைத்தட்டிய மக்கள்.. உருகிய விஜயகாந்த்.. நெகிழ்ந்த தொண்டர்கள்!
- பிறந்தநாளன்று ‘கம்பேக் கொடுத்த விஜயகாந்த்’.. ‘களைகட்டிய கொண்டாட்டங்கள்’.. ‘உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்’..
- ‘இந்த முறையும் அதை தவறவிட்ட தேமுதிக’.. அனைத்து தொகுதியிலும் பின்னடைவு!
- ‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு!
- பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா விஜயகாந்த்? என்ன சொல்கிறார்கள் டாக்டர்கள்?
- ‘புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடியா?’.. ரோல் ஆன பிரேமலதா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
- ‘ஒளிமயமான எதிர்காலம்’ எம்ஜிஆர் பட பாடலா?.. பிரேமலதா கூறியது என்ன?
- அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி அறிவிப்பு..! தேமுதிக -வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்?
- ‘ஒரு மணப் பொண்ணு இருந்தா 10 பேர் வந்து கேப்பாங்கதான்’: பிரேமலதா விஜயகாந்த்!