TVS வேணு சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.பிரேமா சீனிவாசன் காலமானார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

TVS வேணு சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.பிரேமா சீனிவாசன் உடல்நல குறைவால் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

பிரேமா ஸ்ரீனிவாசன்

முன்னாள் சுங்கத்துறை அதிகாரியான கே.ரங்கசாமியின் மகள் பிரேமா. சிறார் ஆங்கில இலக்கியத்தில் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். பிரேமா, டிவிஎஸ் குழும நிறுவனர் டி.வி.சுந்தரம் ஐயங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மகன்களான வேணு சீனிவாசன் மற்றும் கோபால் சீனிவாசன் தொழிலதிபர்களாக உள்ளனர்.

1932 ஆம் ஆண்டு பிறந்த பிரேமா ஸ்ரீனிவாசன்,  அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1960 களில் வரலாறு படித்தவர். பருவநிலை மாற்றம் குறித்து இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மெட்ராஸ் சுற்றுச்சூழல் சங்கத்தை நிறுவிய பெருமையும் இவரையே சாரும்.

கலை மற்றும் கலாச்சாரத்தின் தீவிர காதலரான பிரேமா சீனிவாசன் Pure Vegetarian CookBook உட்பட பல புத்தகங்களை எழுதியவர். எழுத்து மற்றும் சிற்பக்கலை தவிர, ஆன்மீகம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் அவருக்கு ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. அதுமட்டும் அல்லாமல் inKo (The Indo-Korean Cultural and Information Centre) அமைப்பில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் பிரேமா ஸ்ரீனிவாசன் இருந்தார். இந்தோ - கொரியன் கலாச்சார மற்றும் தகவல் மையத்தின் பொறுப்பாளர்களில் இவருடைய மகன் வேணு ஸ்ரீனிவாசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரேமா ஸ்ரீனிவாசன் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வயது 90 ஆகும். பிரேமா ஸ்ரீனிவாசனின் மறைவினால்  அவருடைய குடும்பமே கோகத்தில் மூழ்கியுள்ளது.

PREMA SRINIVASAN, TVS, VENU SRINIVASAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்