'நிறைமாத இளம் கர்ப்பிணிப் பெண்'... 'மருத்துவமனைக்கு சென்றபோது'... 'கணவர் கண்முன்னே'... 'நடந்தேறிய கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இரவிமங்கலத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (30). கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (27). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ப்பமடைந்த மாரியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால், பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்றுள்ளார்.
கரடிகூட்டம் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மகுடீஸ்வரனின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் மகுடீஸ்வரனும், மாரியம்மாளும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நிறைமாத கர்ப்பிணியான மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட மகுடீஸ்வரன் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்னும் ஒரு சில நாட்களில் பிரசவமாகும் நிலைமையில் இருந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக சென்றநிலையில், கணவர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...
- 'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...
- ‘நேருக்குநேர்’ மோதிய பைக்குகள்.. காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்கள மீட்ட அமைச்சர்.. குவியும் பாராட்டுகள்..!
- ‘எந்திரத்துக்குள் தலை சிக்கி’... வேலை நேரத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. பதறவைத்த சம்பவம்!
- திருமண ‘அழைப்பிதழ்’ கொடுக்கச் சென்ற.. ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த ‘துயரம்’... ‘கதறியழுத’ உறவினர்கள்... மனதை ‘உலுக்கும்’ சம்பவம்...
- அதிவேகத்தில் சென்றப் பேருந்து... மின்கம்பத்தில் இடித்து.. பள்ளத்தில் கவிழ்ந்து நிகழ்ந்த கோரம்... 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்!
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ‘17 பேருடன்’ புறப்பட்ட கார்... ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியபோது நடந்த ‘கோரம்’... ‘சோகத்தில்’ மூழ்கிய கிராமங்கள்...
- 'பெற்ற தாயை கொலை செய்த மகள்!'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன?'... 'பதபதைக்க வைக்கும் உண்மை சம்பவம்'...
- பட்டப்பகலில் கல்லூரி டீச்சரை ‘பெட்ரோல்’ ஊற்றி கொழுத்திய நபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
- “பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்!”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ!